‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” ரஜினி படம் குறித்து லாரன்ஸ்..!


‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” ரஜினி படம் குறித்து லாரன்ஸ்..!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமை காட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

இவர் தற்போது சாய் ரமணி இயக்கத்தில் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணி நாயகியாக நடிக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் ரஜினியின் மூன்றுமுகம் போலீஸ் கெட்டப் புகைப்படத்துடன் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் போலீஸ் கெட்டப்பையும் இணைத்து ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் லாரன்ஸ் கூறியதாவது… “இந்த டிசைனை பார்த்தேன். ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவருக்கு முன்பு நான் மிகச்சிறியவன்” என்று தெரிவித்துள்ளார்.

அட அவர் சொல்றது சரிதான்.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!