பாட்ஷா-2 எடுத்து ரஜினி இமேஜை கெடுக்காதீர்கள் – சுரேஷ் கிருஷ்ணா


பாட்ஷா-2 எடுத்து ரஜினி இமேஜை கெடுக்காதீர்கள் – சுரேஷ் கிருஷ்ணா

சத்யாமூவிஸ் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் ‘பாட்ஷா’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், சரண்ராஜ், யுவராணி, ஆனந்த்ராஜ், ஜனகராஜ், தேவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் செம ஹிட்டடித்தன.

இப்படத்தை தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்காக முறை ஒளிப்பரப்பி இருந்தாலும் இன்றும் சேனலை மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முன் வந்த நிலையில் ரஜினியோ பாட்ஷா ஒரு முறைதான்… அது தமிழ் சினிமாவின் மைல்கல். இரண்டாம் பாகம் வேண்டாம் என மறுத்துவிட்டார்.

இதனிடையில் சுரேஷ் கிருஷ்ணாவும் ரஜினியின் கருத்துக்கு மதிப்பளித்து, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம் என மறுத்துள்ளார். அவர் ஒரு தடவை சொன்னா… நூறு தடவை சொன்ன மாதிரி. அதற்கு நிகராக நிச்சயம் ஒரு படம் வரமுடியாது. வந்தால் ரஜினியின் மாஸ், ஸ்டைல் ஆகியவற்றை அது டேமேஜ் செய்துவிடும். தயவு செய்து யாரும் ‘பாட்ஷா-2’ எடுக்கவும் முயற்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.