‘உன்னையும் கலாய்ப்பேன்’ – பாலாஜிக்கு விக்ரமன் டோஸ்!


‘உன்னையும் கலாய்ப்பேன்’ –  பாலாஜிக்கு விக்ரமன் டோஸ்!

பிரபல வானொலியில் ஆர்.ஜேவாக பணிபுரிந்து வருபவர் பாலாஜி. இவர் ஆர்.ஜேவாக இருந்ததால் இவர் பெயருடன் அதுவும் ஒட்டிக்கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் எவரையும் கலாய்த்து பேச கூடிய ஆற்றல் மிக்கவர். தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

‘எதிர்நீச்சல்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வடகறி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். படங்களை பற்றிய விமர்சனங்களையும் செய்து வருகிறார். இதனால் இவருடைய பேச்சுக்கு  ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த இது என்ன மாயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். விழாவில் இயக்குனர் விக்ரமனும் கலந்து கொண்டார். விக்ரமனை பேச அழைக்கும் போது ‘சார் உங்கள் செண்டிமெண்ட் ஸ்டைலில் ஏதாவது பேசுங்கள்’ என்று கலாய்க்கும் விதமாக கூறினார். இதனால் கோபமடைந்த விக்ரமன் ஆர்ஜே பாலாஜியை பார்த்து…

“நான் உன்னை விட கலாய்க்க தெரிந்தவன். உன்னையும் கலாய்ப்பேன். பொதுநிகழ்ச்சியில் ஜென்டில்மேனா நடந்து கொள்ள நினைக்கிறேன். ஆனால் நான் ரியல் ஜென்டில்மேன் இல்லை. இனி எவரிடமும் இது போல் பேசாதே” எனக் கூறினார். அதன்பிறகு பாலாஜியின் முகத்தை பார்க்கணுமே! ஹயோ… ஹயோ… ‘இது என்ன மாயம்’, ‘யட்சன்’, ‘நானும் ரௌடிதான்’, ‘புகழ்’ போன்ற படங்கள் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கிறது.

சமீபத்தில் நடந்த வேறொரு விழாவில் தொகுப்பாளினி அர்ச்சனா நடிகர்  ராதாரவியிடம் வாங்கி கட்டிக் கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.