‘சிம்பு பாடலுக்கு நேரத்தை வீணடிக்க முடியாது…’ – குமுறிய குஷ்பு!


‘சிம்பு பாடலுக்கு நேரத்தை வீணடிக்க முடியாது…’ – குமுறிய குஷ்பு!

சிம்பு பாடி இணையத்தில் வெளியாகிய பீப் பாடலில் பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ளதால் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே, சிம்பு மற்றும் அனிருத் மீது மாதர் சங்கம் பல்வேறு வழக்குகளை தொடுத்து அவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி சிம்பு, அனிருத் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம் பிரிவு 4, பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (509), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (67) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சிம்பு மற்றும் அனிருத் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது இப்பாடல் குறித்து நடிகை குஷ்புவிடம் கருத்து கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர்… ” என்னிடம் பீப் சாங் பற்றி கேட்பதை நிறுத்துங்கள். அந்தப் பாடலை கேட்பதற்கு ஆர்வமும் நேரமும் எனக்கில்லை. அதற்காக நேரத்தை வீணடிக்க முடியாது. வெள்ள நிவாரணப் பணிகளில் நான் தற்போது பிஸியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார் குஷ்பு.