மணிரத்னம் படத்திலிருந்து துல்கர் விலகலா?


மணிரத்னம் படத்திலிருந்து துல்கர் விலகலா?

மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படம் இளைஞர்கள் மற்றும் காதலர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. எனவே மணிரத்னத்தின் அடுத்த படத்தை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அவரும் தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

இப்புதிய படத்தில் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், கார்த்தி, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது என்றனர். ஆனால் தற்போது வந்துள்ள செய்திகள் அதில் சில மாறுதல்களை கொண்டுள்ளது. இதில் கார்த்தி மற்றும் நித்யாமேனன் நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளதாம். துல்கர், கீர்த்தி பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் நடித்த நானி இப்படத்தில் இணைய சம்மதித்து கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் துல்கருக்கு பதிலாக நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.