தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த துல்கர்..!


தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக வந்த துல்கர்..!

சமீபகாலமாக மலையாள படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருவது அதிகரித்துள்ளது. இங்குள்ள இயக்குனர்களுக்கு கற்பனை திறன் குறைவா? அல்லது எதற்கு ரிஸ்க்? என்று அவர்கள் நினைக்கிறார்களா? எனத் தெரியவில்லை.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘த்ரிஷ்யம்’, ‘ஷட்டர்’, ‘மெமரீஸ்’, ‘பெங்களுர் டேஸ்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ‘பிரேமம்’ மற்றும் ‘சார்லி’ ஆகிய படங்களின் ரீமேக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.

இதில் ‘சார்லி’ பட ரீமேக்கில் விஜய் அல்லது சூர்யா நடிக்கலாம் என ஒருமுறை கூறப்பட்டது. அதன்பின்னர் தனுஷ் அப்படத்தை தயாரித்து நடிக்கக்கூடும் எனவும் தகவல்கள் வந்தன.

அண்மையில் இந்த போட்டியில் சிவகார்த்திகேயனின் பெயரும் சேர்க்கப்பட்டது. ஆனால் தற்போது சார்லி ரீமேக்கில் துல்கர் சல்மானே நடிக்கவிருக்கிறார் என்ற உறுதியான தகவல்கள் வந்துள்ளன.

இதிலும் பார்வதியே நாயகியாக நடிக்கிறாராம். எனவே, விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.