தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினி…. ‘மகிழ்ச்சி’யில் ரசிகர்கள்…!


தேர்தல் பிரச்சாரத்தில் ரஜினி…. ‘மகிழ்ச்சி’யில் ரசிகர்கள்…!

பாட்ஷா படவிழாவில் வெடிக்குண்டு கலாச்சாரத்தைப் பற்றி ரஜினி பேசினாலும் பேசினார்.

அன்றுமுதல், கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினியை அரசியலில் இணைக்காத காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறுவது இல்லை.

ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது, ரஜினியின் ஆதரவை கேட்க கட்சிகள் காத்திருக்க தொடங்கின.

அதற்கேற்ப தன் படத்தில் அரசியல் பன்ச்களை வைக்க ரஜினியும் தவறுவது இல்லை.

இந்நிலையில் தற்போது ரஜினியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். என்னது ரஜினி அரசியலுக்கு வந்துட்டாரா..? என அவசரப்பட வேண்டாம்.

அதாவது தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விளம்பரத்தில் ரஜினியின் கபாலி வசனமான மகிழ்ச்சி என்ற வார்த்தையை வைத்தே விளம்பர செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.

‘காசு வாங்காம வாக்களித்தால் மகிழ்ச்சி’ என்ற விளம்பரங்களை வெளியிட்டு வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை செய்து வருகிறது.

தங்கள் தலைவரின் ஒரு வார்த்தை பன்ச் வசனமென்றாலும், அதையும் எவரும் விட்டு வைப்பதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.