ஜிவி.பிரகாஷ் – லைகா கூட்டணிக்கு கைகொடுக்கும் சமந்தா..!


ஜிவி.பிரகாஷ் – லைகா கூட்டணிக்கு கைகொடுக்கும் சமந்தா..!

டார்லிங் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே நாயகனை வைத்து எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற படத்தை இயக்கி வருகிறார் சாம் ஆண்டன்.

ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.

இவர்களுடன் நிரோஷா, சரவணன், கருணாஸ், யோகிபாபு, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கிருஷ்ணன் வசந்த ஒளிப்பதிவு செய்ய, படத்தின் நாயகனே இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் மோசன் போஸ்டரை நடிகை சமந்தா நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவிருக்கிறாராம்.

லைகா நிறுவனம் தயாரித்த கத்தி படத்தில் சமந்தா நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.