கமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..!


கமல், அஜித்திற்கு பிறகு நட்டி…. பார்வதி சொல்லும் ‘எங்கிட்ட மோதாதே’..!

சதுரங்க வேட்டை படத்தில் தில்லு முல்லு செய்து ரசிகர் நெஞ்சங்களை கவர்ந்தவர் நட்டி என்ற நட்ராஜ்.

பிரபல ஒளிப்பதிவாளரான இவர், விஜய்யின் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது மீண்டும் எங்கிட்ட மோதாதே படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஈராஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக பார்வதி நாயர் நடித்து வருகிறார். அஜித்தின் என்னை அறிந்தால், கமலின் உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு பிறகு பார்வதி நடிக்கும் படம் இது.

இவர்களுடன் சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்க, ராமு செல்லப்பா இயக்கி வருகிறார். நட்ராஜன் சங்கரன் இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது.