அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி தரும் ஜோக்கர்… வைரலாகும் வீடியோ..!


அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி தரும் ஜோக்கர்… வைரலாகும் வீடியோ..!

‘குக்கூ’ படத்தை தொடர்ந்து ராஜூமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜோக்கர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.

‘ஆரண்ய காண்டம்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்த சோமசுந்தரம் நாயகனாக நடிக்க, புதுமுகங்கள் காயத்ரி மற்றும் ரம்யா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் நம் நாட்டு நடப்பை தோலுரித்து காட்டுகிறது. அரசியல்வாதிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும், குடிமகன்கள் ஏமாளிகளாக இருப்பதும் அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளன.

அதில் உள்ள ஒரு சில வரிகள் இதோ….

என்னங்க சார் உங்க சட்டம்… யேய்.. யேய்…

என்னங்க சார் உங்க திட்டம்…

கேள்வி கேட்க ஆள் இல்லாம போடுறிங்க கொட்டம்

நூறு கோடி மனிதரு… யாரு யாரோ தலைவரு..

ஓட்டு வாங்கி போற நீங்க, ஊழலோடு டீலரு…

ஆண்ட பரம்பரை கைநாட்டு, ஆட்டி படைக்குது கார்பரேட்டு

இவ்வாறாக அதன் பாடல் வரிகள் உள்ளது.

இது தேர்தல் நேரத்தில் வருவதால் இப்பாடல் சினிமா உலகில் மட்டுமல்ல அரசியல் உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இதன் வீடியோ பதிப்பு தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.