ட்ரெண்டிங்கில் எந்திரன்-2;  ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியது!


ட்ரெண்டிங்கில் எந்திரன்-2;  ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியது!

சிவாஜி’, ‘எந்திரன்படத்தை தொடர்ந்து ரஜினி, ஷங்கர் கூட்டணி மீண்டும்எந்திரன்-2’ படத்திற்காக இணையவுள்ளது. இதன் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு துவங்க உள்ள நிலையில் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை இப்போதே ஒப்பந்தம் செய்து விட்டனர்.

ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. படத்தின் ஹீரோயின் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. தீபிகா படுகோனோ, கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை தற்போது இயக்குனர் ஷங்கர் துவங்கியுள்ளார். இதுபற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போதே ரசிகர்கள் இதுகுறித்த ட்ரெண்டில் இறங்கி விட்டனர். #Endhiran2 என்ற ஹேஷ்டேக் க்ரியேட் செய்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இன்னும் ‘கபாலி’ ட்ரெண்டே முடிந்தபாடில்லை அதற்குள் ரஜினியின் அடுத்த ட்ரெண்ட் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.