90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…?


90 நாட்களில் 53 படங்கள்… ரசிகர்களை கவர்ந்தவை எத்தனை…?

இந்த 2016 வருடம் தொடங்கி, மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த 90 நாட்களில் மட்டும் தமிழில் கிட்டதட்ட 53 படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருசில படங்கள் கதைக்காகவும், சில படங்கள் கதாநாயகர்களுக்காகவும் ஓடியது.

இந்த ஆண்டு பிறந்த அன்றே ஐந்து படங்கள் வெளியானது. ஆனால் அவை பெரிதாக வெற்றிப் பெறவில்லை. பொங்கல் அன்று வெளியான சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் இந்தாண்டிற்கான முதல் வெற்றியை துவக்கி வைத்தது.

அதே நாளில் வெளியான, விஷாலின் கதகளி, பாலாவின் தாரை தப்பட்டை படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தாரை தப்பட்டை படத்திற்காக பின்னணி இசை அமைத்த இளையராஜா தேசிய விருது பெற்றார்.

ஜனவரி மாத இறுதியில் வெளியான இறுதிச்சுற்று ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. நாயகி ரித்திகா சிங்கிற்கு தேசிய விருதும் கிடைத்தது. பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியான விசாரணை பல சாதனைகளை படைத்தது. வெற்றிமாறன் இயக்கிய இப்படம் 3 தேசிய விருதுகளை பெற்று தந்தது.

பிப்ரவரி 19ஆம் அன்று வெளியான மிருதன் மற்றும் சேதுபதி படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிப்ரவரி 26ஆம் தேதி வெளியான கணிதன் மற்றும் ஆறாது சினம் படங்கள் வெகுவாக பாராட்டப்பட்டது.

மார்ச் 4ஆம் தேதி வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன்பின்னர் வெளியான காதலும் கடந்து போகும், புகழ், சவாரி, தோழா, ஜீரோ ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.