சிவகார்த்திகேயன்-நயன்தாராவுடன் இணையும் மலையாள நடிகர்.!


சிவகார்த்திகேயன்-நயன்தாராவுடன் இணையும் மலையாள நடிகர்.!

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் கீர்த்தியுடன் டூயட் பாடி வரும் இவர், தனது அடுத்த படத்தில் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் டூயட் பாடவிருக்கிறார்.

‘தனி ஒருவன்’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகரான பஹத் பாசில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் என்பது நாம் அறிந்ததே.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.