‘அஜித் மச்சினி ஷாம்லியால் பிரச்சினை இல்லையாமே…’ டவுட்டை கிளியர் செய்த புரொடியூசர்!


‘அஜித் மச்சினி ஷாம்லியால் பிரச்சினை இல்லையாமே…’ டவுட்டை கிளியர் செய்த புரொடியூசர்!

அஜித்தின் மச்சினியும் ஷாலினியின் தங்கையுமான நடிகை ஷாமிலி தற்போது நாயகியாக இரண்டு தமிழ் படங்களில் அறிமுகமாகிறார். தனுஷ் உடன் ‘கொடி’ படமும் விக்ரம் பிரபுவுடன் ‘வீரசிவாஜி’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் பைசல் லத்தீப் தயாரிக்கும் ‘வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி’ என்ற மலையாளப் படத்திலும் நாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடைய படத்தில்தான் ஷாலினியும் நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி’ படத்தில் ஷாம்லி பிரச்சினை செய்கிறார் என்ற செய்தி வெளியானது. அவருடன் சிகையலங்கார நிபுணர் உள்ளிட்ட நான்கு பெண்கள் சூட்டிங் வருவதாகவும் அவர்களுக்கு தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என ஷாம்லி கூறியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பைசல் லத்தீப் கூறியதாவது… “ஷாமிலி குறித்து வெளியாகும் செய்திகள் தவறானவை. எந்தவித தொந்தரவையும் அவர் எங்களுக்கு கொடுக்கவில்லை” என்றார்.