நான் தகுதியானவளா..? ‘இறுதிச்சுற்று’ ரித்திகாவின் சந்தேகம்…!


நான் தகுதியானவளா..? ‘இறுதிச்சுற்று’ ரித்திகாவின் சந்தேகம்…!

இவரின் முதல் படமே இவரின் நடிப்புக்காக தேசிய விருதை பெற்று தந்துள்ளது. அட யாருன்னு தெரியலையா..? நம்ம இறுதிச்சுற்று ரித்திகா சிங்கை பற்றித்தான் சொல்கிறோம்.

தேசிய விருது தனக்கு கிடைத்தது பற்றி ரித்திகா சிங் கூறியிருப்பதாவது…

“கடவுளே…. என் வாழ்க்கையில் நான் இதுவரை இவ்வளவு அழுததது இல்லை. எனக்கு தேசிய விருதா…? நான் ஒருபோதும் நினைக்கவே இல்லை. எனக்கு அந்த விருதை பெறும் தகுதி இருக்கிறதா..?

நான் அப்படத்திற்காக டப்பிங் கூட பேசவில்லை. உமா மகேஸ்வரிதான் பேசினார். எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி.

மேலும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த மாதவன் சார், இயக்குனர் சுதா ஆகியோருக்கும் நன்றி.

இந்த உலகத்தில் நான்தான் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக உணர்கிறேன். எனக்கு ஆதரவளித்த என் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்”

என்று தெரிவித்துள்ளார்.