‘முதலில் டைட்டில் அப்புறம்தான் எல்லாம்..’ – விஜய் உத்தரவு!


‘முதலில் டைட்டில் அப்புறம்தான் எல்லாம்..’ – விஜய் உத்தரவு!

சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதுவரை பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 59’ என்ற அழைத்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா எமி ஜாக்சன், பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தாணு தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது இசைமைப்பில் உருவாகும் 50வது படம் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘தர லோக்கல்…’ என்ற பாடலின் வரிகளை மட்டும் இன்று அக். 16ஆம் தேதியன்று வெளியிட இருந்தனர். ஆனால் அதை தற்போது வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

முதலில் படத்தின் டைட்டில்லை அறிவித்து விட்டு படம் தொடர்பான எதையும் வெளியிடலாம் என விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இத்தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அவர்களும் உறுதி செய்துள்ளார். எனவே இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.