உடல் எடை கூடாமல் இருக்க பட்டினி கிடக்கும் த்ரிஷா!


உடல் எடை கூடாமல் இருக்க பட்டினி கிடக்கும் த்ரிஷா!

ஜோடி படத்தில் அறிமுகமாகிய த்ரிஷாவுக்கு தற்போதுதான் ரியல் லைப் ஜோடி கிடைத்துள்ளது. திருமண நாளை நெருங்கி கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு இப்போதும் கைவசம் 4 படங்கள் உள்ளது. ஜெயம் ரவியுடன் தமிழில் ‘பூலோகம், அஞ்சலியுடன் ‘அப்பாடக்கரு’, லயன் என்ற தெலுங்கு படம் மற்றும் தமிழ், தெலுங்கில்  உருவாகி வரும் ‘போகி’ படத்தில் பூனம் பஜ்வா, ஓவியா ஆகியோருடன் சேர்ந்து நடிக்கிறார்.

பத்து வருடங்களுக்கு மேலாக அதே துள்ளல் இளமையுடன் தனி நாயகியாக கலக்கி வரும் த்ரிஷாவின் இளமை ரகசியம் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இதோ உங்களுக்கு த்ரிஷாவின் பிட்னெஸ் சீக்ரெட்ஸ்…

1) காலையில் இவரது மினி ப்ரேக் பாஸ்ட்… ஆம்லேட், பரோட்டடா, தயிர் போன்றவை தானாம்.

2) அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பாராம் (குடிநீர் மட்டும்) மற்றும் கிரீன் டீ, மாதுளை ஜூஸ்.

3) உடலை பளபளவென வைத்துக்கொள்ள எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழரசங்கள்.

4) இது மட்டும் செய்தால் த்ரிஷா போல அழகாயிடலாமா? என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. முக்கியமாக தினமும் தவறாது உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டுமாம். யோகா, நடைப்பயிற்சி மற்றும் எளிமையான உடற்பயிற்சிகள் செய்தால் போதுமாம்.

இதை தவறாமல் கடைப்பிடித்து வருவதுதான் த்ரிஷாவின் பிட்னஸ் சீக்ரெட்ஸாம். இருந்த போதிலும் சில நேரம் பார்ட்டிகளில் கலந்து கொண்டால் மிச்சம் வைக்காமல் ஒரு கை பார்த்து விடுவாராம். ஒருவேளை உடல் எடை அதிகரித்துவிட்டால் வரும் நாட்களில் பட்டினிதானாம்.

இப்பவாச்சும் புரியுதா? வசதியானவர்களும் பட்டினியா கிடப்பாங்கன்னு…