ஆர்யாவை அடுத்து விஷாலுடன் ஆட்டம் போடும் தமன்னா!


ஆர்யாவை அடுத்து விஷாலுடன் ஆட்டம் போடும் தமன்னா!

‘பாண்டியநாடு’ படத்தை தொடர்ந்து ‘பாயும் புலி’ படத்திற்காக விஷால்-சுசீந்திரன் கூட்டணி அமைத்துள்ளனர். விஷாலுடன் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சூரி, சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் விஷால். படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது, இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் நடிக்க விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

இதனையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். சண்டக்கோழி முதல் பாகத்தில் ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், மோனிகா ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் இமான் இசையமைக்கிறார். ராஜ்கிரண், சூரி ஆகியோர் நடிக்க ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருந்தார். பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் கீர்த்தியே விஷால் ஜோடி என்பதால் இப்படத்திற்கு வேறு ஒரு நடிகையை தேடிவருகின்றனர். எனவே தமன்னாவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
தமன்னா தற்போது ஆர்யாவுடன் ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.