‘இனி எந்தப் படத்தை வெளியிட மாட்டோம்’ – தயாரிப்பாளர்கள் சங்கம்


‘இனி எந்தப் படத்தை வெளியிட மாட்டோம்’ – தயாரிப்பாளர்கள் சங்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தை வெளியிட்டது வேந்தர் மூவிஸ். இதே நிறுவனம் நாளை வெளியாகவுள்ள விஷாலின் ‘பாயும் புலி’ படத்தை தயாரித்துள்ளது. மேலும் ‘லிங்கா’ நஷ்ட ஈடுதொகையில் பணம் வரவேண்டியுள்ளதால் ‘பாயும் புலி’ படத்துக்கு பல்வேறு ஏரியாக்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தடை போட உள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் தடை விதிக்கவே இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில்…

”சென்னை, கோயம்பேடு ரோகிணி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் வேலையை செய்துவருகிறார். தற்போது ‘பாயும்புலி’ படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப் பஞ்சாயத்து செய்துவருகிறார். ‘பாயும் புலி’ தயாரிப்பாளரை மிரட்டி பெரும் தொகை ஒன்றை கேட்டு வருகிறார்.
இதனை கண்டித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் எந்த திரைப்படத்தையும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்துள்ளோம்.

மேலும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் தற்போது திரையிடப்பட்டு வரும் படங்களையும் நிறுத்த போகிறோம். இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு திரையுலகை மீட்டுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.