இளையதளபதி ரசிகர்களை அசத்த ஜிவி பிரகாஷ் திட்டம்!


இளையதளபதி ரசிகர்களை அசத்த ஜிவி பிரகாஷ் திட்டம்!

‘ராஜா ராணி’ படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி, பிரபு, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி திருநாளில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இவரது இசையமைப்பில் உருவாகும் 50வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறும் நிலையில் இரண்டு பாடல்கள் விஜய் பாடவுள்ளார். செல்லக்குட்டி எனத் தொடங்கும் பாடல் மட்டும் சமீபத்தில் விஜய் குரலில் பதிவானது.

மேலும் இப்படத்திற்காக இரண்டு தீம் மியூசிக்கை கம்போஸ் செய்துள்ளாராம் ஜிவி. பிரகாஷ். இது விஜய் ரசிகர்களை பெரிதும் கவரும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.