சிவகார்த்திகேயன் பாணியில் ஜி.வி.பிரகாஷ்..!


சிவகார்த்திகேயன் பாணியில் ஜி.வி.பிரகாஷ்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜ், காக்கி சட்டை படத்தில் பிரபு மற்றும் ரஜினிமுருகன் படத்தில் ராஜ்கிரண் ஆகிய படங்களில் சீனியர் நடிகர்களுடன் நடித்து வந்தார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படங்களின் வெற்றியில் சீனியர் நடிகர்களின் பங்களிப்பும் அதிகமாகவே இருந்தது. தற்போது இவரது பாணியில் நடிகர் ஜி.வி. பிரகாஷும் இணைந்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கிறார். இதில் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மற்ற கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட ‘பென்சில்’ விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.