சேனலில் வீடியோ காட்டப்போகும் ஜி.வி. பிரகாஷ்..!


சேனலில் வீடியோ காட்டப்போகும் ஜி.வி. பிரகாஷ்..!

கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் நாயகனாக நடித்து இசையமைத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.

இதனைத் தொடர்ந்து தற்போது யூடியூப் சேனலை ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதற்கான அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “சினிமாவுக்கு வந்து 10 வருஷம் ஆச்சு. தற்போது விஜய் நடித்துள்ள தெறி படம் என்னுடைய 50வது படம்.

விரைவில் இந்த சேனலில் தெறி படத்தின் பாடல்கள் மேக்கிங் வீடியோவை வெளியிடவுள்னேன்.

என்னுடைய படத்தின் காட்சிகள், பாடல்கள் சார்ந்த வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர்கள் கமல், பார்த்திபன், இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரும் யூடியூப் சேனல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.