ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களை டார்கெட் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…!


ரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களை டார்கெட் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…!

‘டார்லிங்’ படத்தின் வெற்றிக்குப்பின் சாம் ஆண்டன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.

இது பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ரஜினியின் பிரபல வசனமாகும்.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ஆனந்தி, கருணாஸ், நிரோஷா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

முக்கிய வேடத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசரை நேற்று மாலை வெளியிட்டனர்.

இதில் ஜி.வி. பிரகாஷ், ஆக்ஷன் வேடம் ஏற்றுள்ளார். கழுத்தில் ஜானி என்ற பெயர் பொறித்த செயின், கையில் ஒரு கத்தி என டெர்ர்ராக வருகிறார்.

மேலும் வேதாளம் படத்தின் தெறிக்க விடலாமா? என்ற டயலாக்கும், தெறி பேபி என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் ரசிகர்களை கவர ஜி.வி. பிரகாஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.