ரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…?


ரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…?

கொடி, தொடரி படங்களை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராணா நடிக்கிறார்.

வில்லனாக இயக்குனரே நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு ஆங்கில பத்திரிகையின் பேட்டியில் இதை கௌதம் மேனன் மறுத்துள்ளார்.

இதனால் தனுஷின் வில்லன் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தனுஷை மிரட்டும் வில்லனாக தனுஷே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. எனவேதான் வில்லன் ரோல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக ஹீரோக்களே வில்லன்களாக நடித்து வருகின்றனர். எந்திரன் படத்தில் ரஜினி, வாலி படத்தில் அஜித், 24 படத்தில் சூர்யா நடித்தனர்.

எனவே, இந்த வரிசையில் தனுஷும் இணைந்து விடுவார் என்றே தெரிகிறது.