“சோகத் தாடியுடன் திரியும் மிஸ்டர் “க்ளீன் ஷேவ்” கௌதம் மேனன்??”


“சோகத் தாடியுடன் திரியும் மிஸ்டர் “க்ளீன் ஷேவ்” கௌதம் மேனன்??”

மாதவன், ரீமாசென் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குனாராக அறிமுகமானவர் கௌதம் மேனன்.

இயக்குனராக 14 வருடங்களைக் கடந்து விட்டாலும் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சில படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றியிருந்தார்.

தற்போது வினீத் ஸ்ரீநிவாசன் இயக்கும் ‘ஜகோபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ என்ற மலையாளப் படத்தில் நிவின் பாலியுடன் நடித்து வருகிறார்.

இவர்களுடன் ரெஞ்சி பணிக்கர், T.G ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கௌதம் படங்களில் நடித்தாலும், இயக்கத்தில் ஈடுபட்டாலும் பெரும்பாலும் க்ளீன் ஷேவ் முகத்துடனே காணப்படுவார். ஆனால் தற்போது நடித்து வரும் மலையாள படத்திற்காக முகம் முழுவதும் தாடியுடன் காணப்படுகிறார்.

இதில் இவரின் கேரக்டர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இப்படம் இன்றைய இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள உறவை எடுத்துரைக்கும் படமாக உருவாகிறதாம்.