நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக புதிய திட்டம்!


நடிகர் சங்க வரலாற்றில் முதன்முறையாக புதிய திட்டம்!

நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர், அஞ்சலி தேவி, எஸ்.எஸ்.ஆர், சிவாஜி கணேசன், விகே ராமசாமி, ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலரும் இச்சங்கத்தின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.

இதில் சரத்குமார் மட்டுமே தொடர்ந்து ஒன்பது வருடங்களாக பதவி வகித்து வந்தார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் இவர் தோல்வியுற்றதால் நாசர் நடிகர் சங்கத் தலைவர் ஆனார். இவருடன் விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் நிர்வாகிகளாக பதவி ஏற்றனர்.

இவர்கள் பதவியேற்றது முதல் சங்கத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சங்கம் தொடங்கப்பட்ட இந்த 64 வருடங்களில் இல்லாத ஒரு புதுமையை இந்த அணி நிகழ்த்தியுள்ளது.

அதாவது சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முதல்முறையாக சீருடை (யூனிபார்ம்) வழங்கப்பட்டுள்ளதாம். நடிகர் சங்க செயலாலர் விஷால் ஊழியர்களுக்கு யூனிபார்ம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.