அரசாணை ரத்து…. நிஜத்திலும் ‘கெத்து’ காட்டிய உதயநிதி…!


அரசாணை ரத்து…. நிஜத்திலும் ‘கெத்து’ காட்டிய உதயநிதி…!

கெத்து படத்தின் பெயர் தமிழ் சொல் இல்லை என வரிவிலக்கு தர மறுத்தது தமிழக அரசு. எனவே படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான உதயநிதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி துரைசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ‘கெத்து’ தமிழ் வார்த்தை இல்லை என படத்தை பார்த்த ஆறு பேர் குழு எந்த ஆதாரமும் இல்லாமல் அறிக்கை கொடுத்துள்ளனர்.

இந்த வார்த்தை, தமிழ் அகராதி மற்றும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் இடம்பெற்றுள்ளது. மேலும் சென்சாரில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ஆபாசமோ வன்முறையோ இடம் பெறவில்லை.

இதில், தமிழக வணி வரித்துறை செயலர் இயந்திர தனமாக செயல்பட்டு, வரிச்சலுகை வழங்க மறுத்துள்ளார். எனவே, வரிச்சலுகை வழங்க மறுத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன்.

இப்படம் வெளியான ஜனவரி 14ஆம் முதல் வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.