நேற்று சிவகார்த்திகேயன்… இன்று சந்தானம்… கவுண்டரின் கணக்கு..!


நேற்று சிவகார்த்திகேயன்… இன்று சந்தானம்… கவுண்டரின் கணக்கு..!

சில நாட்களாக நடிப்பு உலகில் இருந்து விலகி இருந்த, கவுண்டமணி தற்போது தனி நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.

சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கணபதி பாலமுருகன் இயக்கும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா முக்கிய படத்தில் நடித்துள்ளார். இதில் கேரன்வேன்களை சினிமா கம்பெனிகளுக்கு வாடகைக்கு விடும் கேரக்டரில் நடித்துள்ளார் கவுண்டர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் சந்தானம் கலந்துகொண்டு ஆடியோ சிடியை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டமணி நடித்து கடந்தாண்டு வெளியான ’49 ஓ’ படத்தின் ஆடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.