ஜிவி. பிரகாஷ்-எமி இணையும் ‘கெட்ட பயடா இந்த கார்த்தி’


ஜிவி. பிரகாஷ்-எமி இணையும் ‘கெட்ட பயடா இந்த கார்த்தி’

‘வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி. பிரகாஷ். படத்தின் பாடல்கள் ஹிட்டடிக்கவே முன்னணி இளம் இசையமைப்பாளராக உயர்ந்தார். ரஜினி, அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.

இதற்கிடையில் ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இதனால் நடிக்கும் ஆசை துளிர்விடவே அரிதாரம் பூசி தமிழ் சினிமாவின் ‘டார்லிங்’ ஆனார். இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ வெற்றி பெறவே வாய்ப்புகள் வரிசை கட்ட ஆரம்பித்தன.

தற்போது ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருடன் ‘கயல்’ ஆனந்தி, சிம்ரன், ப்ரியா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் கௌரவ தோற்றத்தில் ஆர்யா நடித்துள்ளார்.

இதனையடுத்து ஜி.வி. பிரகாஷ் ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இவரின் ஜோடியாக ‘ஐ’ நாயகி எமி ஜாக்சன் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுத, வசனங்களை அட்லி எழுதுகிறார். இயக்குனர்விஜய்யிடம் பணியாற்றிய சங்கர், குணா என இருவரும் இப்படத்தை இயக்கவிருக்கின்றனர்.

இதுநாள் வரை பெயரிப்படாத இப்படத்திற்கு ‘கெட்ட பயடா இந்த கார்த்தி’ என்று தலைப்பிட்டு இருக்கின்றனர். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக நந்தகோபால் தயாரிக்கிறார். படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.