வெற்றிமாறன் கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்!


வெற்றிமாறன் கதையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்!

‘பொல்லாதவன்’ படத்தில் அறிமுகமாகி ‘ஆடுகளம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு விருதுகளை அள்ளிக் கொண்டு வந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். அதன் பிறகு இவர் இயக்கத்தில் படங்கள் வெளிவராவிட்டாலும் உதயம் NH4, நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட படங்கள் இவரது வசனங்களில் வெளியானது.

தற்போது ‘அட்டக்கத்தி’ தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கக விசாரணை என்ற படத்தை இயக்கிவருகிறார். இதற்கிடையில் இவரது தயாரிப்பில் ‘காக்கா முட்டை’, ‘ஈட்டி’ போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திற்கு வெற்றிமாறன் கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் விஜய்யின் உதவி இயக்குனர்களில் ஒருவர் இயக்கக்கூடும் எனத் தெரிகிறது.

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் ‘பென்சில்’ மற்றும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.