அஜித்துடன் இணையும் ‘தெறி’ இசையமைப்பாளர்..!


அஜித்துடன் இணையும் ‘தெறி’ இசையமைப்பாளர்..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தெறி இசை பிப்ரவரி 20ஆம் தேதியும், நடிகர் ஜி.வி.பிரகாஷின் பென்சில் படம் விரைவிலும் வெளியாகவிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நிறைய படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் ஜி.வி. பிரகாஷ், ஒன்றன் பின் ஒன்றாக முடித்து கொடுத்து வருகிறார்.

தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் ஆனந்தியுடன் டூயட் பாடி வருகிறார். ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதே நிறுவனம்தான் ரஜினியின் 2.0 படத்தை மிக மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், வருகிற மே 1ஆம் தேதி, அஜித் பிறந்தநாளன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ‘கெட்ட பையன்டா இந்த கார்த்தி’, ’ப்ரூஸ் லீ’, ‘கடவுள் இருக்குறான் குமாரு’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம் ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.