ஜிவி. பிரகாஷின் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’?


ஜிவி. பிரகாஷின் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’?

ஒரு பக்கம் இசை, மறுபக்கம் நடிப்பு என இரட்டை குதிரைகளில் திறம்பட சவாரி செய்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடித்து வரும் படங்களுக்கு மிகவும் வித்தியாசமான பெயர்களை சூட்டி வருகின்றனர்.

“ப்ரூஸ் லீ”, “எனக்கு இன்னொரு பேர் இருக்கு”, “கெட்ட பையன்டா இந்த கார்த்தி” மற்றும் “கடவுள் இருக்கான் குமாரு” ஆகிய படங்களின் வரிசையில் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ என்ற பெயரை தன் புதிய படத்திற்கு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. (இது எல்லாம் எங்க போய் முடியுமோ?)

இப்படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார்.

இதுதவிர சிம்புவுடன் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ள படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.  ‘அடங்காதவன்’  எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்புவுக்கும் மூன்று கெட்டப் என்பது தனிக்கதை. ரூ. 20 கோடியில் தயாராகவுள்ள இப்படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.