‘தெறி’க்கு முன்பே ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷின் போனஸ்.!


‘தெறி’க்கு முன்பே ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷின் போனஸ்.!

தமிழ் புத்தாண்டு நெருங்க நெருங்க தெறி பீவர் தென்னகத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

ஏற்கெனவே தெறி படத்தில் ஏழு பாடல்கள் உள்ளது. தற்போது போனஸாக ஒரு சிறிய பாடலை உருவாக்கியிருக்கிறாராம்.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் #heyaasman என்ற ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து தெரிவித்துள்ளார்.

தெறி ரிலீஸ் ஆகும் முன்பே இந்த போனஸ் பாடல் வெளியாகவிருக்கிறது என்பது ஹைலைட்.