விஜய், சூர்யாவுடன் மல்லுக்கட்டும் சிம்பு, ஜி.வி.பிரகாஷ்..!


விஜய், சூர்யாவுடன் மல்லுக்கட்டும் சிம்பு, ஜி.வி.பிரகாஷ்..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகவிருக்கிறது.

இதே நாளில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் இறுதிக்கட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படமும் அன்றைய தினத்தில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் மற்ற தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை வெளியிட தயங்கி வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்துள்ள ‘பென்சில்’ படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

மணிநாகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்கத் துவங்கிய முதல் படம் ‘பென்சில்’ என்பது குறிப்பிடத்தக்கது.