மீண்டும் ரஜினி வசனமா?? அதுக்கு அனுமதி வேறயா??


மீண்டும் ரஜினி வசனமா?? அதுக்கு அனுமதி வேறயா??

படையப்பா படத்துல ரஜினி பேசுற, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ அந்த பிரபல வசனத்தை ஒரு டீம் தங்கள் படத்துக்கு தலைப்பாக்கியது போல,

பாட்ஷா படத்துல இடம்பெற்ற ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு..’ டயலாக்கை. ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர்.

இப்படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகவுள்ளது. எனவே இதுதொடர்பாக அனுமதியை பெற ரஜினியைச் சந்தித்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

அப்படியே தன் படத்திற்கு தங்கள் ஆசியும் வேண்டும் என அதையும் பெற்று திரும்பியிருக்கிறார்.

அப்போது ஜி.வி.பிரகாஷுடன் இப்படத்தை இயக்கும் இயக்குனர் சாம் ஆண்டனும் சென்றுள்ளார்.

இதில் ஜி.வி. பிரகாஷின் ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் நிரோஷா, கருணாஸ், சரவணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தையும் ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது.

ஒண்ணு ரஜினி பட ரீமேக்.. இல்லேன்னா ரஜினி பட டைட்டில சுடுறது… இப்படியெல்லாம் பண்றதுதான் இப்போ தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்.