வெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.!


வெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், தற்போது மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

இவர் முதன் முதலாக நாயகனாக நடித்த பென்சில் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து எனக்கு இன்னொரு பேரு இருக்கு, வெர்ஜின் மாப்ள, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ, கேடி பில்லா கில்லாடி ரங்கா 2, கெட்ட பையன்டா இந்த கார்த்தி ஆகிய படங்களை ஒப்புக் கொண்டு, ஒவ்வொரு படங்களாக நடித்து வருகிறார்.

இதன் பின்னர் பிச்சைக்காரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த சசி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.