ஜூன் 26ஆம் தேதி ரிலீஸ்; அரை டஜனை தாண்டுமாம்..!


ஜூன் 26ஆம் தேதி ரிலீஸ்; அரை டஜனை தாண்டுமாம்..!

வெள்ளிக்கிழமை என்றால் இல்லத்தரசிகளுக்கு ஒரு எக்ஸ்ட்ரா மகிழ்ச்சிதான். குடும்பத்தோடு கோயில் சென்று அப்படியே வெளியே சென்று வரலாம். அதுபோல அரசுத்துறை, ஐடி துறை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வார இறுதிநாள். எனவே விடுமுறை நாளை எப்படி செலவழிக்கலாம்? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருப்பார்கள்.

அதுபோல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது இரண்டு படங்களாவது வெளியாகிவிடும் என்பதால் சினிமா ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம்தான். இந்நிலையில் வருகிற ஜூன் 26ஆம் தேதி இவர்களுக்கு டபுள் x ட்ரிபிள் மகிழ்ச்சிதான். குறைந்தது ஏழு படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. தினம் ஒரு படம் பார்த்தால் கூட அடுத்த வெள்ளிக்கிழமை வந்துவிடும். சரி… இனி என்னென்ன படங்கள் வெளியாகவிருக்கிறது என்பதை பார்ப்போம்…

  1. அறிமுக இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ‘இன்று நேற்று நாளை’. விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்துள்ள இப்படத்தை ‘திருக்குமரன் என்டர்பிரைசஸ்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ‘டைம் மெஷின்’ எனும் கான்செப்ட் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது எதிர்பார்ப்பு மிக்க படமாக உருவாகியுள்ளது.
  2. ஆதி, நிக்கில் கல்ராணி ஜோடியாக நடித்துள்ள இயக்கியிருக்கும் படம் ‘யாகவாராயினும் நா காக்க’. த்ரில்லர் மற்றும் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனரும், ஆதி, சத்யபிரபாஸ் ஆகியோரின் தந்தை ரவிராஜா பின்னி ஷெட்டி இப்படத்தை தயாரித்துள்ளார்.
  3. விமல், ‘புன்னகைப்பூ’ கீதா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள படம் ‘காவல்’. ஆர்.நாகேந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
  4. ‘மூணே மூணு வார்த்தை’ என்ற இப்படத்தை எஸ்.பி.சரண் தயாரித்துள்ளார். மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் சிதம்பரம், அதிதி செங்கப்பா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். காதல், காமெடி கலந்த ஜனரஞ்சக படம் இது!
  5. நடிகர் கருணாஸ் நாயகனாக நடித்துள்ள படம் ‘லொடுக்கு பாண்டி’. , ரஜனீஷ் இயக்கியுள்ள இப்படத்தில் இளவரசு, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
  6. கோபு பாலாஜி இயக்கத்தில் சாரதி, அன்சிபா நடித்துள்ள படம் ‘பரஞ்ஜோதி’.
  7. மேலும் பெ.மோகன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஒரு தோழன் ஒரு தோழி’ என்ற படமும் வெளியாகவுள்ளது.