நயன்தாரா, ஆண்ட்ரியாவுடன் இணையும் ஹன்சிகா.!


நயன்தாரா, ஆண்ட்ரியாவுடன் இணையும் ஹன்சிகா.!

‘இது நம்ம ஆளு’ என்று சிம்பு படத்திற்கு என்ன காரணத்திற்காக பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. அதில் சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா இணைந்தார்.

தற்போது அவருடைய இன்னொரு ஆளும்.. ஐ மீன் அவருடைய இன்னொரு முன்னாள் காதலி ஹன்சிகாவும் இதில் இணையவிருக்கிறாராம்.

இப்படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படவிருக்கிறது என்று படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் அண்மையில் கூறியிருந்தார் அல்லவா. அந்த காட்சிகளில் கௌரவ தோற்றத்தில் ஹன்சிகா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ஆண்ட்ரியாவும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.