4 ஹீரோக்கள், 2 முறை; அமேசிங் ஹன்சிகா!


4 ஹீரோக்கள், 2 முறை; அமேசிங் ஹன்சிகா!

சமீபத்தில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், படம் பார்த்த அனைவரும் ஹன்சிகா நடிப்பை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் ஹன்சிகா.

இந்நிலையில் சிம்புவுடன் இவர் நடித்த ‘வாலு’ படம் ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இவர் சுந்தர் சியின் இயக்கத்தில் ‘அரண்மனை-2’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் சித்தார்த், த்ரிஷா, பூனம் பஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தை தொடர்ந்து சித்தார்த்துடன் இரண்டாவது முறையாக இப்படத்திற்காக இணைந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விஜய்யின் ‘புலி’. இதற்கு முன்பே விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.

அதுபோல் ‘எங்கேயும் காதல்’ படத்தை தொடர்ந்து ‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்காக ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மீகாமன்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்திருந்தார். அதற்கு முன்பே ‘சேட்டை’ படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

இப்படி ஒவ்வொரு ஹீரோக்களும் தங்கள் படத்திற்கு புதிய புதிய ஹீரோயின்களை தேடிச் செல்லாமல் ஹன்சிகா திறமையைப் பார்த்து அவரையே தங்கள் படத்திற்கு ஒப்பந்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.