ஆறு லட்சம் நிதியுதவி; ஆச்சர்யப்பட வைத்த ஹன்சிகா!


ஆறு லட்சம் நிதியுதவி; ஆச்சர்யப்பட வைத்த ஹன்சிகா!

இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன் திரையுலக வாழ்வை தொடங்கியவர் ஹன்சிகா. தெலுங்கில் தன் முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றவர்.

தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவையில்லாமல் ஒவ்வொரு பண்டிகை தினத்தையும் அவர்களுடன் செலவிட்டு அந்தக் குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார்.

கடந்த மாதம் பூகம்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளம் நாட்டிற்கு தற்போது  6 லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளார் இவர். இத்தகைய செயல்கள் மூலம் நடிப்பில் மட்டும் முன்னணி இல்லை. நல்லெண்ணத்திலும் ஹன்சிகாதான் முன்னனி என்பதை நிரூபித்து வருகிறார். இந்த இளம் வயதில் இவரின் இந்த உதவிகள் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தற்போது ‘புலி’, ‘வாலு’, ‘அரண்மனை 2′, ‘ரோமியோ ஜுலியட்’, ‘உயிரே உயிரே’, ‘இதயம் முரளி’ என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.