சல்மான் கைதால் ஹன்சிகாவின் இதயம் நொறுங்கியதாம்!


சல்மான் கைதால் ஹன்சிகாவின் இதயம் நொறுங்கியதாம்!

கடந்த 2002ஆம் நடிகர் சல்மான்கான் கார் ஓட்டிச் சென்ற போது சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிவிட்டார். இந்த விபத்தில் ஒருவர் பலியானார் மற்றும் நான்கு பேர் காயம் அடைந்தனர்.

இதனால் மும்பை போலீஸார் நடிகர் சல்மான் மீது வழக்கு பதிவு செய்தனர். கடந்த 12 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த சல்மான்கானின் வழக்கு இன்று முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சல்மானின் ‘தபாங் 3’ மற்றும் ‘என்டிரி மெயின் நோ என்டிரி’ ஆகிய 2 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. தற்போது ‘பஜ்ரங்கி பாய் ஜான்’ மற்றும் ‘பிரேம் ரத்தன் தான் பாயோ’ போன்ற படங்களில் நடித்து வந்தார். இவரை நம்பி இந்த படங்களில் ரூ. 200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருந்தாலும் இன்னும் முடிவடையவில்லையாம். எனவே இதன் தயாரிப்பாளர்கள் செய்வது அறியாமல் இருக்கின்றனர்.

‘பஜ்ரங்கி பாய் ஜான்’ என்ற படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கபீர்கான் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சல்மான்கான் குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானதால் ஈராஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்துள்ளதாம்.

இந்த தண்டனை குறித்து திரையுலகினரும் ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில்.. ‘பேச வார்த்தைகள் இல்லை. இதயமே நொறுங்கியதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சல்மானின் கைதால் பாலிவுட் திரையுலகம் மிகுந்த கவலை அடைந்துள்ளது.