சிம்பு-ஜெயம் ரவி மோதல்; சந்தோஷத்தில் ஹன்சிகா!


சிம்பு-ஜெயம் ரவி மோதல்; சந்தோஷத்தில் ஹன்சிகா!

எல்லை மீறாத கவர்ச்சி, அழகுடன் கூடிய நடிப்பு என தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருபவர் ஹன்சிகா. தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி விஜய், சூர்யா, ஆர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

‘அரண்மனை’, ‘மீகாமன்’, ‘ஆம்பள’ ஆகிய படங்களை தொடர்ந்து இவரது நடிப்பில் இந்த ஆண்டு நிறைய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. தற்போது இவரது நடிப்பில் சிம்புவுடன் ‘வாலு’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’, விஜய்யுடன் ‘புலி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. விஜய்யின் ‘புலி’ படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதில் சிம்புடன் நடித்த ‘வாலு’ மற்றும் ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்கள் வருகிற ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஹன்சிகா நடித்த இரு படங்கள் மோதிக் கொண்டாலும் இரு படத்திலும் தான் இருப்பதால் ஏகப்பட்ட குஷியில் இருக்கிறாராம் அம்மணி.

எக்ஸ்ட்ரா தகவல் : இதே தேதியில் சந்தானம் தனது ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படமும் வெளியாகவுள்ளது.