ஓகே கண்மணி நாயகனை ஓகே செய்த ஹன்சிகா!


ஓகே கண்மணி நாயகனை ஓகே செய்த ஹன்சிகா!

பெரும்பான்மையான மலையாள படங்களில் நடித்திருந்தாலும் தமிழக ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் துல்கர் சல்மான். இதற்கு காரணம்… மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நித்யா மேனனுடன் நடித்து இளம் ரசிகர்களை முக்கியமாக ரசிகைகளை கொள்ளை கொண்டவர் இந்த நாயகன்.

தற்போது மீண்டும் ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இயக்கும் படத்தில் இவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இதில் துல்கருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இவர்கள் இணையும் இப்புதிய படத்தை ‘அரண்மனை’ படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்களுடன் பணியாற்றவுள்ள மற்ற கலைஞர்கள் ஒப்பந்தமானவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.