‘சின்ன குஷ்பூ’வையும் விடாத சுந்தர் சி.


‘சின்ன குஷ்பூ’வையும் விடாத சுந்தர் சி.

‘தீயா வேலை செய்யனும் குமாரு’, ‘அரண்மனை’, ‘ஆம்பள’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ஹன்சிகாவுடன் இணைகிறார் சுந்தர் சி. வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான ‘அரண்மனை’ கடந்த ஆண்டு வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் சக்கை போடு போட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. விஷால்  தயாரித்து நடித்த ஆம்பள படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது. சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கவிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். சுந்தருடன் இவர் முதன்முறையாக இணைகிறார்.

இப்படத்தை ‘அவ்னி சினிமேக்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பாக குஷ்பூ தயாரிக்கவிருக்கிறார். ஹன்சிகாவை சின்ன குஷ்பூ என்று திரையுலகினர் சிலர் அழைப்பது குறிப்பிடத்தக்கது.