ரஜினிகாந்த் வழியில் இணைந்தார் சூர்யா…!


ரஜினிகாந்த் வழியில் இணைந்தார் சூர்யா…!

பல எதிர்பார்ப்புக்களுக்கிடையில் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இப்படத்திற்கு ‘சிங்கம் 3’ என்று பெயரிடப்படும் என்று பலரும் எண்ணி வந்த நிலையில், இப்படத்தின் பெயர் மாற்றப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் அதாவது ஜனவரி 7ஆம் தேதி தொடங்கும் நேரத்தில் இப்படத்தின் தலைப்பை அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு எவரும் எதிர்பாராத வகையில் ‘S3’ என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹரி இயக்கும் அனைத்தும் படங்களுக்கும் இவரே ஒளிப்பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. விடி விஜயன் எடிட்டிங் செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘எந்திரன் 2’ உருவாகவிருந்த நிலையில் அப்படத்திற்கு ‘2.0’ என்று பெயரிட்டனர். அதுபோல் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகவிருந்த சூர்யா படத்திற்கும் ‘S3’ என்று பெயரிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.