‘புலி’ விஜய்யுடன் இணையும் ‘சிங்கம்’ இயக்குனர்!


‘புலி’ விஜய்யுடன் இணையும் ‘சிங்கம்’ இயக்குனர்!

சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றாலும் ‘காக்கி’ என்ற தலைப்பே பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்காக விஜய் பாடிய ‘செல்லக்குட்டி’ பாடல் ஜி.வி. பிரகாஷ் இசையில் பதிவானது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள ‘விஜய் 60’, ‘விஜய் 61’, ‘விஜய் 62’ ஆகிய படங்களின் இயக்குனர்கள் யார்? என்ற பேச்சு கோலிவுட்டில் பலமாக எழுந்துள்ளது. எஸ்.ஜே. சூர்யா மற்றும் மோகன் ராஜா தலா ஒரு படங்களை இயக்கக்கூடும் என கூறி வந்த நிலையில் தற்போது ஒரு புதிய இயக்குனரும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை தயாரித்த விஜயாவாகினி நிறுவனத்திற்கு  விஜய் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை “அழகிய தமிழ் மகன்படஇயக்குர் பரதன் எழுதிவிட்டாராம். எனவே இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து ஹரி இயக்குவார் என கூறப்படுகிறது.

அடுத்த மாதம் சூர்யா நடிப்பில் தொடங்கவிருக்கும் ‘சிங்கம் 3’ படத்தை முடித்துவிட்டு விஜய்யுடன் முதன்முறையாக ஹரி இணைவார் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.