ஹரீஷ்- ரிச்சர்ட் இணைந்து நடிக்க ‘0 முதல் 1 வரை’.!


ஹரீஷ்- ரிச்சர்ட் இணைந்து நடிக்க ‘0 முதல் 1 வரை’.!

அறிமுக இயக்குனர் யாசின் என்பவர் ‘0 முதல் 1 வரை’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை சிங்கு பிங்கு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘0 முதல் 1 வரை’ படம் பற்றி இயக்குநர் யாசின் பேசும்போது,

’இது ஒரு த்ரில் மற்றும் காதல் ஆக்சன் என கலந்து கட்டிய கதை. ஹரீஷ் – ரிச்சர்ட் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதில் மூன்று தலைமுறைக் கதைகள் வரும்; கிராமம், நகர்ப்புறம், மாநகரம் என்று மூன்று விதமான பின்னணிகள் வரும்; எழுபதுகள் ,தொண்ணூறுகள், நடப்புக்காலம் என மூன்று விதமான காலகட்டங்கள் இதில் இடம் பெறும்.

சபீர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சிங்கப்பூரில் இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாடல்களை விவேகா மற்றும் தனிக்கொடி ஆகியோர் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு பாபு குமார். எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’படத்தில் பணியாற்றிய கே. எம். ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.ஒரே கட்டத்தில் தொடங்கி 45 நாட்களில் முடிக்கவுள்ளனர்.

Related