தளபதியுடன் இணையும் ‘தனி ஒருவன்’ கலைஞன்..!


தளபதியுடன் இணையும் ‘தனி ஒருவன்’ கலைஞன்..!

தெறியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பரதன் இயக்கத்தில் “தளபதி 60″ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமைய்யா, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்த ஹரீஷ் உத்தமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதவிருக்கிறார். பிரவின் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.

பிரபல விஜயா புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.