விக்ரம்-சூர்யா கைகொடுத்தார்கள்… ஆனால் கேவி ஆனந்த் கழட்டி விட்டுடாரே…!


விக்ரம்-சூர்யா கைகொடுத்தார்கள்… ஆனால் கேவி ஆனந்த் கழட்டி விட்டுடாரே…!

சில வருடங்களுக்கு முன்பு படுபிஸியாக இருந்த ஹாரீஸ் ஜெயராஜ் சில காலமாக குறைவான படங்களுக்கே இசையமைத்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் எஸ் 3 மற்றும் விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதனிடையில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் இயக்கிய ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ ஆகிய படங்களில் பாடல்கள் பெரியளவில் பேசப்பட்டது.

அதற்கு காரணம் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்தான். ஆனால் கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ஹாரீஸ் இசையமைக்கவில்லை. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவிருக்கிறாராம்.

இப்படத்தில் டி.ராஜேந்தர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.