ஹாட்ரிக் அடிப்பாரா விஜய்சேதுபதி… காத்திருக்கும் ரசிகர்கள்..!


ஹாட்ரிக் அடிப்பாரா விஜய்சேதுபதி… காத்திருக்கும் ரசிகர்கள்..!

கடந்தாண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனுஷ் தயாரித்திருந்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் போலீஸை விட ரவுடிதான் கெத்து என காட்டியிருந்தார் சேதுபதி.

ஆனால் இவரது அடுத்தப் படமான சேதுபதி படத்தில் நிஜமான கெத்து போலீஸ்தான். என்கௌண்டரில் ரவுடியை சுட்டுத் தள்ளமுடியும் என கம்பீரமாக கூறியிருந்தார்.

இப்படமும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாளை மறுநாள் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன் இணைந்து நடித்துள்ள காதலும் கடந்து போகும் வெளியாகவுள்ளது.

இப்படத்திலும் விஜய் சேதுபதி ரவுடியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு படங்கள் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், விஜய் சேதுபதி தன் அடுத்த படத்தையும் வெற்றிப்படமாக கொடுத்து ஹாட்ரிக் அடிப்பாரா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.